Saturday, September 12, 2026

மதுபானக் கூட உரிமையாளர்களுக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை..

Must read

ரூ.7 லட்சம் லஞ்சம்; சார்பதிவாளர் உட்பட இருவர் கைது

கவுந்தப்பாடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலத்தை பதிவு செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரின் பேரில், ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் கவுந்தப்பாடி சார்பதிவாளர்...

மதுபானக் கூட உரிமையாளர்களுக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை..

கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட FL-2 மற்றும் FL-3 மதுபானக் கூடங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகப் பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

கோவையில் உணவகத்திற்கு சீல்; 12 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் விதிமுறைகளைப் பின்பற்றாத உணவகத்திற்கு FSSAI சீல் வைத்துள்ளது, மேலும் 12 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது, இந்திய...

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்.6 இல் இடைத்தேர்தல்…

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட FL-2 மற்றும் FL-3 மதுபானக் கூடங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகப் பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் K.ரெட்டி, இ.கா.ப.,தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், அனைத்து FL-2 மற்றும் FL-3 மதுபானக் கூட உரிமையாளர்களும் உரிமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள், அரசு விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், மதுபானக் கூடங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகத்தினர் பொறுப்புடன் செயல்பட்டு, சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகள் மற்றும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாதவாறு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

குறிப்பாக,

  1. உறுப்பினர்கள் (Members) அல்லாத நபர்களுக்கும், 21 வயதிற்குட்பட்ட நபர்களுக்கும் எந்தச் சூழ்நிலையிலும் மதுபானம் வழங்கக்கூடாது. குறிப்பாக வெளிமாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர் அல்லாத நபர்கள் தொடர்பாக உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும். மேலும், உறுப்பினர் விவரங்கள் உள்ளிட்ட அனைத்து பதிவேடுகளும் முறையாகவும் புதுப்பிக்கப்பட்ட நிலையிலும் பராமரிக்கப்பட வேண்டும்.
  2. மதுபானக் கூட வளாகத்திற்குள் அல்லது அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறும் சிறிய தகராறு, வாக்குவாதம், சந்தேகத்திற்கிடமான நடவடிக்கை அல்லது வேறு ஏதேனும் அசம்பாவித சம்பவம் குறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
  3. மதுபானக் கூடத்தின் உட்புறம், வெளிப்புறம், நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகள் உள்ளிட்ட முக்கிய இடங்கள் முழுமையாகப் பதிவாகும் வகையில் CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டு, அவை முறையாக செயல்படும் நிலையில் பராமரிக்கப்பட வேண்டும். CCTV பதிவுகள் குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு பாதுகாத்து வைக்கப்பட வேண்டும். சட்டப்பூர்வ தேவைக்காக காவல்துறையினர் கோரும் போது அவை வழங்கப்பட வேண்டும்.
  4. உரிமம் பெற்ற வளாகத்திற்குள் அருந்துவதற்காக அனுமதிக்கப்பட்ட மதுபானங்களை எந்தச் சூழ்நிலையிலும் வளாகத்திற்கு வெளியே எடுத்துச் செல்ல அனுமதிக்கக்கூடாது. மதுபான விற்பனை மற்றும் அருந்துதல் தொடர்பான அனைத்து உரிம நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளும் கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும்.

மேலும், விதிகளை மீறி செயல்படும் பார்களுக்கு உடனடியாக உரிமம் ரத்து செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

- Advertisement -

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article

ரூ.7 லட்சம் லஞ்சம்; சார்பதிவாளர் உட்பட இருவர் கைது

கவுந்தப்பாடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலத்தை பதிவு செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரின் பேரில், ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் கவுந்தப்பாடி சார்பதிவாளர்...

மதுபானக் கூட உரிமையாளர்களுக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை..

கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட FL-2 மற்றும் FL-3 மதுபானக் கூடங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகப் பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

கோவையில் உணவகத்திற்கு சீல்; 12 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் விதிமுறைகளைப் பின்பற்றாத உணவகத்திற்கு FSSAI சீல் வைத்துள்ளது, மேலும் 12 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது, இந்திய...

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்.6 இல் இடைத்தேர்தல்…

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

திடக்கழிவு மேலாண்மை திட்டம் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம்

கோவை கூடலூர் நகராட்சியில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டம் புதிய விதிகளின்படி, வீடுகள், நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கழிவு உருவாக்குபவர்களும் குப்பைகளை உருவாகும் இடத்திலேயே நான்கு வகைகளாகப்...