Sunday, July 26, 2026

ரயிலில் அடிபட்டு 4 வயது ஆண் யானை உடல் சிதறி உயிரிழப்பு…

Must read

பழநியில் ரூ.100 கோடி நிலம் முறைகேடு: நிலம் விற்றவர், வாங்கியோர் தலைமறைவுசிபிசிஐடி தீவிர தேடுதல் வேட்டை

பழநியில் ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு பயந்து நிலத்தை விற்றவர், வாங்கியவர்கள் என 3 பேர் தலைமறைவாகினர். அவர்களைத் தேடும் பணியை...

டிஜிட்டல் லஞ்சம்,கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தில் ‘ரெய்டு’ 

லஞ்சப் பணத்தைக் கண்டுபிடிக்க அதிகாரிகளின் ஆன்லைன் கணக்குகளை டிராக்கிங் செய்த போலீசார், ₹5,000 ரொக்கமும் பறிமுதல், விடிய, விடிய நடந்த விசாரணை !!! தமிழ்நாடு முழுவதும்...

கோவையில் அடகு கார் விவகாரத்தில் ₹70 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காட்டூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அதிரடி கைது.

திருநெல்வேலி அருகே உள்ள மேலக்கரையை சேர்ந்தவர் ருஜைனா பாத்திமா. இவருடைய கணவர் புதிய கார் வாங்கியுள்ளார். பண பிரச்சினைக்காக அந்த காரை ரவிக்குமார் என்பவரிடம் அடமானம் வைத்தாக தெரிகிறது. அந்த...

2 வருஷ படிப்பை இழுத்தடிக்கும் நிர்வாகம்; புத்தகம் இல்லை, வகுப்பும் இல்லை, ஆனால் அபராதம் மட்டும் ₹300 வசூலிப்பதா ? என மாணவர்கள் கடும் கொதிப்பு !!!

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தொலைதூரக் கல்வி முறையில் பல்வேறு முதுகலை படிப்புகளில் படித்து வருகின்றனர் . ஏற்கனவே இரண்டு வருடங்களில் முடிக்க வேண்டிய படிப்பை,...

மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கிறது கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டம். இந்த மலைத்தொடர் தான் கேரள – தமிழக எல்லையாகவும் திகழ்கிறது. கோவையிலிருந்து கேரளாவிற்கு செல்லும் பாசஞ்சர், விரைவு மற்றும் அதிவிரைவு ரயில்கள் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி 20 கிலோ மீட்டருக்கு மேல், வனப்பகுதிக்குள் செல்கின்றன. இந்த மலைப்பகுதியில் யானைகள் அதிகம் வசித்து வருகின்றன. கடந்த 25 ஆண்டுகளில் இந்தப் பகுதியில் ரயிலில் அடிபட்டு சுமார் 25க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்துள்ளன.
யானைகள் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பதை தடுக்க, நீதிமன்ற உத்தரவின்படி தமிழக வனத்துறையின் சார்பில் ஏஐ உதவியோடு இயங்கும் தெர்மல் கேமராக்கள், மதுக்கரை முதல் வாளையார் வரை பொருத்தப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் தமிழக எல்லைப்பகுதிகளில் வசிக்கிற யானைகள் கண்காணிக்கப்படுகின்றன. இதனால் யானைகள் ரயிலில் அடிபட்டு இறப்பது தடுக்கப்பட்டுள்ளது. ஆனால் கேரள வனப்பகுதியில் தெர்மல் கேமராக்கள் பொருத்தப்படவில்லை என்பதால், யானைகள் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பது தொடர் கதையாகி வருகிறது. கேரள வனப்பகுதியான வாளையார் பூங்கா அருகே இன்று காலை 4.30 மணியளவில், கண்ணூர் எக்ஸ்பிரஸ் ரயில் பாலக்காடு நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 4 வயது ஆண் யானையின் மீது ரயில் மோதியது. இந்த விபத்தில் யானை உடல் சிதறி உயிரிழந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் உயிரிழந்த யானையின் உடல்பாகங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து வன ஆர்வலர் பாண்டியராஜா கூறுகையில், “கேரளா எல்லைப் பகுதியான வாளையார் அருகே ரயில் மோதி யானை உயிரிழந்திருப்பது வருத்தமளிக்கிறது. எட்டிமடை – மதுக்கரை இடையே தமிழக வனத்துறையின் சிறப்பான முயற்சியால் 12 கோபுரங்களில் தலா இரண்டு கேமராக்கள் உட்பட மொத்தம் 24 தெர்மல் சென்சிங் கேமராக்கள் பொருத்தப்பட்டு யானைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதனால் இந்த வழித்தடத்தில் 2022 அக்டோபர் மாதம் முதல் ரயில் மோதி யானைகள் எதுவும் உயிரிழக்கவில்லை.

எனவே தமிழக வனத்துறைக்குட்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது போல வாளையார் – கொல்லங்கோடு இடையேயும் தெர்மல் சென்சிங் கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட வேண்டும். அப்போதுதான் இதுபோன்று ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதை தடுக்க முடியும். ஒவ்வொரு வருடமும் இந்தியா முழுவதும் 10 முதல் 15 யானைகள் ரயில் மோதி உயிரிழக்கின்றன. எனவே ரயில்வே துறை இந்த விஷயத்தில் முழு கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

பழநியில் ரூ.100 கோடி நிலம் முறைகேடு: நிலம் விற்றவர், வாங்கியோர் தலைமறைவுசிபிசிஐடி தீவிர தேடுதல் வேட்டை

பழநியில் ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு பயந்து நிலத்தை விற்றவர், வாங்கியவர்கள் என 3 பேர் தலைமறைவாகினர். அவர்களைத் தேடும் பணியை...

டிஜிட்டல் லஞ்சம்,கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தில் ‘ரெய்டு’ 

லஞ்சப் பணத்தைக் கண்டுபிடிக்க அதிகாரிகளின் ஆன்லைன் கணக்குகளை டிராக்கிங் செய்த போலீசார், ₹5,000 ரொக்கமும் பறிமுதல், விடிய, விடிய நடந்த விசாரணை !!! தமிழ்நாடு முழுவதும்...

கோவையில் அடகு கார் விவகாரத்தில் ₹70 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காட்டூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அதிரடி கைது.

திருநெல்வேலி அருகே உள்ள மேலக்கரையை சேர்ந்தவர் ருஜைனா பாத்திமா. இவருடைய கணவர் புதிய கார் வாங்கியுள்ளார். பண பிரச்சினைக்காக அந்த காரை ரவிக்குமார் என்பவரிடம் அடமானம் வைத்தாக தெரிகிறது. அந்த...

2 வருஷ படிப்பை இழுத்தடிக்கும் நிர்வாகம்; புத்தகம் இல்லை, வகுப்பும் இல்லை, ஆனால் அபராதம் மட்டும் ₹300 வசூலிப்பதா ? என மாணவர்கள் கடும் கொதிப்பு !!!

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தொலைதூரக் கல்வி முறையில் பல்வேறு முதுகலை படிப்புகளில் படித்து வருகின்றனர் . ஏற்கனவே இரண்டு வருடங்களில் முடிக்க வேண்டிய படிப்பை,...

கரூரில் 3,084 ஏக்கர் இனாம் நிலங்கள் யாருடைய பெயரில் உள்ளன?

கரூர் மாவட்ட 3,084.95 ஏக்கர் இனாம் நிலங்கள் குறித்த வழக்கில் சம்பந்தப்பட்ட நிலம் யாருடைய பெயரில் உள்ளன என்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. இனாம் நிலங்களுக்கு பதிவுத்துறை...