Wednesday, February 18, 2026

காவல் நிலையத்தில் ஒப்பந்ததாரரை தாக்கிய ஆய்வாளர் உட்பட 3 பேருக்கு தலா ஒரு மாதம் சிறை தண்டனை

Must read

விஜய் வேலூர் மக்கள் சந்திப்புக்கு 20 நிபந்தனைகள் விதித்த போலீசார்..!

வேலூர் அடுத்த அகரம்சேரியில் வரும் 23 ஆம்தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக 33 ஏக்கரில் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன....

மார்ச் 7 வேலூர் வரும் பிரதமர் மோடி: ஏற்பாடுகள் தீவிரம்

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை ( என்டிஏ) வலுப்படுத்தும் விதமாகவும், புதிய கட்சிகளை கூட்டணியில்...

தமிழ்நாட்டில் மார்ச் 16-இல் மாநிலங்களவை தேர்தல்: வெளியானது அறிவிப்பு

தமிழ்நாட்டில் விரைவில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல், மார்ச் 16ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாநிலங்களவையில் தமிழகத்திற்கு மொத்தம் 18 இடங்கள்...

பெண்கள் கணக்கில் ரூ.5,000 வரவு ; மகளிர் உரிமைத்தொகை இனி ரூ.2,000..!

தமிழ்நாட்டில் மகளிருக்கு வழங்கப்பட்டு வரும் ரூ.1000 உரிமைத் தொகையை, திராவிட மாடல் 2.Oவில் (அடுத்த திமுக ஆட்சியில்) ரூ.2,000ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும்,...

திருச்சி: சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் பசுபதி மற்றும் கட்டிட ஒப்பந்ததாரர். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ரவி, வளர்மதி ஆகியோருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.

2016-ல் இருதரப்பினருக்கும் ஏற்பட்ட தகராறு தொடர்பாக, பசுபதி, அவரது மனைவி கலாவதி, மகன்கள் தென்னரசு, தமிழ்ச்செல்வன், ரமேஷ், விவேகானந்தன் ஆகியோர் மீது அப்போது விருகம்பாக்கம் காவல் ஆய்வாளராக இருந்த ஜெயராஜ் வழக்குப் பதிவு செய்துள்ளார்.

முன்ஜாமீன் தொடர்ந்து, பசுபதி மற்றும் அவரது குடும்பத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி, நிபந்தனை முன்ஜாமீன் பெற்றனர். அதன்பின், திருச்சியில் குடும்பத்துடன் தங்கியிருந்து கன்டோன்ட்மென்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தனர். பின்னர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட திருச்சியில் தங்கியிருக்க தேவையில்லை என்ற தளர்வு பெற்றனர்.

இந்த உத்தரவு நகலை அளிப்பதற்காக பசுபதி தனது குடும்பத்தினருடன் கன்டோன்மென்ட் காவல் நிலையத்துக்கு வந்துள்ளார். அப்போது அங்கிருந்த விருகம்பாக்கம் காவல் ஆய்வாளர் ஜெயராஜ் அவரது ஜீப் ஓட்டுநர் கண்ணன், வடபழனி காவல் உதவி ஆய்வாளர் விஜயபாண்டியன் ஆகியோர் சேர்ந்து பசுபதி மற்றும் அவரது குடும்பத்தினரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இது தொடர்பாக பசுபதி தரப்பினர் திருச்சி ஜே.எம்-2 நீதிமன்றத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி கன்டோன்மென்ட் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால், குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்பதால் சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பசுபதி மனுத்தாக்கல் செய்தார். அதன்பின், உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியன் குற்றம் சாட்டப்பட்ட காவல் ஆய்வாளர் ஜெயராஜ், உதவி ஆய்வாளர் விஜயபாண்டியன், ஜீப் ஓட்டுநர் கண்ணன் ஆகியோரின் ‘குற்றமுறு செயல்’ நிரூபிக்கப்பட்டுள்ளதால், 3 பேருக்கும் தலா ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

விஜய் வேலூர் மக்கள் சந்திப்புக்கு 20 நிபந்தனைகள் விதித்த போலீசார்..!

வேலூர் அடுத்த அகரம்சேரியில் வரும் 23 ஆம்தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக 33 ஏக்கரில் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன....

மார்ச் 7 வேலூர் வரும் பிரதமர் மோடி: ஏற்பாடுகள் தீவிரம்

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை ( என்டிஏ) வலுப்படுத்தும் விதமாகவும், புதிய கட்சிகளை கூட்டணியில்...

தமிழ்நாட்டில் மார்ச் 16-இல் மாநிலங்களவை தேர்தல்: வெளியானது அறிவிப்பு

தமிழ்நாட்டில் விரைவில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல், மார்ச் 16ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாநிலங்களவையில் தமிழகத்திற்கு மொத்தம் 18 இடங்கள்...

பெண்கள் கணக்கில் ரூ.5,000 வரவு ; மகளிர் உரிமைத்தொகை இனி ரூ.2,000..!

தமிழ்நாட்டில் மகளிருக்கு வழங்கப்பட்டு வரும் ரூ.1000 உரிமைத் தொகையை, திராவிட மாடல் 2.Oவில் (அடுத்த திமுக ஆட்சியில்) ரூ.2,000ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும்,...

கல்விக் கடன் தள்ளுபடி , முதியோர் ஓய்வூதியம் ரூ.2,000 – அதிமுகவின் 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்

வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகள் விறுவிறுப்படைந்துள்ள சூழலில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், கட்சியின் மாவட்டச் செயலர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த...