Tuesday, April 7, 2026

கோவையில் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையும் களவுமாக சிக்கிய அரசு அதிகாரி..!

Must read

தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக ஆட்சி- வேட்பு மனு தாக்களின் போது எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை..

அதிமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி, சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் இன்று தனது...

கோவை வடக்கு தொகுதியில் ராஜஸ்தான் முதல்வர், அண்ணாமலை முன்னிலையில்  வானதி சீனிவாசன் வேட்பு மனுத் தாக்கல் !!!

தேசிய ஜனநாயக கூட்டணியின் கட்சியினர் - மேளதாளங்கள் முழங்க, ஆதரவாளர்கள் படைசூழ வேட்பு மனு தாக்கல் செய்தார் வானதி சீனிவாசன் !!! கோவை வடக்கு சட்டமன்றத்...

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களுக்கு கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட பா.ஜ.க வினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களாக கோவை வடக்கு மற்றும் அவிநாசி தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ மற்றும் மத்திய இணை...

வானதி vs அண்ணாமலை.. எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு வைத்த செக்.. நடுவில் செந்தில் பாலாஜி

அரசியல் சதுரங்க வேட்டை என்பது எல்லா கட்சிகளும் மேற்கொள்வது தான். இந்த முறை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவை மண்டலத்தை வைத்து வைத்த நகர்வு மிகப்பெரிய ராஜதந்திரமாகவே...

கோவை பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் வீட்டுமனையை வரன்முறைப்படுத்த ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வரி வசூலர் சதீஷ்குமார் என்பவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். இதையடுத்து வரி வசூலர் சதீஷ்குமாரின் அலுவலகம் மற்றும் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுகம், ஷீலா மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

கோவை சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த வியாபாரியான 53 வயதாகும் ஆனந்தவேல் இவர் பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி பகுதியில் வீட்டுமனை ஒன்று வாங்கியுள்ளார். இந்த வீட்டு மனையை வரன் முறைப்படுத்தக்கோரி பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் அண்மையில் விண்ணப்பித்தார்.

இதையடுத்து பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் பில் கலெக்டராக பணியாற்றி வரும் சதீஷ்குமார் என்பவர், அந்த மனையை உள்ளூர் திட்டக் குழுமத்தின் மூலமாக வரன்முறைப்படுத்த கட்டணமாக ரூ.25 ஆயிரம் செலவாகும் என்று கூறியுள்ளார். இதுதவிர வீட்டுமனையை வரன்முறைப்படுத்த ரூ.40 ஆயிரம் பணம் லஞ்சமாக தர வேண்டும் என்று கேட்டாராம், இதனால் அதிர்ச்சியடைந்த ஆனந்தவேல் அவ்வளவு பணம் தர இயலாது என கூறியுள்ளார்.

இதனால் அவரது வீட்டு மனையை வரன்முறைப்படுத்தாமல் சதீஷ்குமார் இழுத்தடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து மீண்டும் பில் கலெக்டர் சதீஷ்குமாரிடம் இதுகுறித்து முறையிட்டுள்ளார். ஆனால் அதன்பின்பும் ஆனந்தவேலின் வீட்டுமனை வரன்முறைப்படுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது .

சிக்கியது எப்படி ?

இதையடுத்து ஆனந்தவேல் கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் பில் கலெக்டரை கையும், களவுமாக பிடிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்தனர். இதன்படி ரூ.40 ஆயிரத்திற்கான ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ஆனந்தவேலிடம் கொடுத்துள்ளனர். ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொண்ட ஆனந்தவேல் நேற்று பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்ற பின்பு அங்கு பணியில் இருந்த பில் கலெக்டர் சதீஷ்குமாரிடம் கொடுத்திருக்கிறார். இதை மறைந்திருந்து கண்காணித்த கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி மற்றும் போலீசார், சதீஷ்குமாரை பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்த ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர். அவரது அலுவலகம் மற்றும் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுகம், ஷீலா மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டார்கள். சோதனையின் விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

இந்த சம்பவம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு இந்த பணத்தில் பங்கு வாங்கும் அதிகாரிகள் யார் யார் ..? என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக ஆட்சி- வேட்பு மனு தாக்களின் போது எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை..

அதிமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி, சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் இன்று தனது...

கோவை வடக்கு தொகுதியில் ராஜஸ்தான் முதல்வர், அண்ணாமலை முன்னிலையில்  வானதி சீனிவாசன் வேட்பு மனுத் தாக்கல் !!!

தேசிய ஜனநாயக கூட்டணியின் கட்சியினர் - மேளதாளங்கள் முழங்க, ஆதரவாளர்கள் படைசூழ வேட்பு மனு தாக்கல் செய்தார் வானதி சீனிவாசன் !!! கோவை வடக்கு சட்டமன்றத்...

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களுக்கு கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட பா.ஜ.க வினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களாக கோவை வடக்கு மற்றும் அவிநாசி தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ மற்றும் மத்திய இணை...

வானதி vs அண்ணாமலை.. எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு வைத்த செக்.. நடுவில் செந்தில் பாலாஜி

அரசியல் சதுரங்க வேட்டை என்பது எல்லா கட்சிகளும் மேற்கொள்வது தான். இந்த முறை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவை மண்டலத்தை வைத்து வைத்த நகர்வு மிகப்பெரிய ராஜதந்திரமாகவே...

தமிழ்நாடு சட்டம் – ஒழுங்கு புதிய டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்

2026 தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், தமிழக காவல்துறை உயரதிகாரிகளை மாற்றி இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அதிரடி...