Wednesday, June 10, 2026

தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர்: ஜூன் 18

Must read

தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர்: ஜூன் 18

தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

யாரேனும் தவறு செய்தால்’.. அதிர்ந்த அமைச்சர்கள்…

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூன் 05) காலை  அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. 'வெற்றி தமிழகம்' என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த அமைச்சரவைக் கூட்டத்தில்...

2031 தேர்தலில் போட்டி …புதிய அரசியல் இயக்கத்தை ஆரம்பித்தார் அண்ணாமலை.

தமிழ்நாட்டில் சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன், அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்தது. இதனையடுத்து, பாஜகவின் மாநிலத் தலைவர் பதவியில் இருந்த அண்ணாமலை மாற்றப்பட்டு அவருக்குப் பதில் புதிய தலைவராக நயினார்...

மகளிர் உரிமை தொகை… பெண்களுக்கு இனி மாதம் ₹3000..!

மேற்கு வங்க அரசு பெண்களுக்கான புதிய வரலாற்றுச் சிறப்புமிக்க நலத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 'அன்னபூர்ணா பண்டார்' என்ற பெயரில் அறிமுகமாகியுள்ள அன்னபூர்ணா யோஜனா 2026 திட்டத்தை முதலமைச்சர் சுவேந்து அதிகாரி ஹவுராவில்...

தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர், “தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் வரும் ஜூன் 18- ஆம் தேதி வியாழக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவைக் மண்டபத்தில் கூடும். அன்றைய தினம் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் உரையுடன் சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்குகிறது. சட்டப்பேரவைக் கூட்டடத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடத்தி பின்னர் அறிவிக்கப்படும் இந்தக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரையின்போது என்ன நடக்கிறது என்பதை நீங்களே பார்க்கப்போகிறீர்கள். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கை மனு தொடர்பாக இதுவரை முடிவு எடுத்திருந்தால் அறிவித்திருப்பேனே? அதிமுக உறுப்பினர்கள் கோரிக்கை தொடர்பாக ஆய்வு செய்து வருகிறேன். காத்திருங்கள் ஆய்வு முடிந்தபின் உரிய நேரத்தில் அறிவிக்கிறேன்.
சட்டப்பேரவையில் தவெக அரசு தமது பெரும்பான்மையை நிரூபித்த நிகழ்வு நேரலை செய்யப்பட்டது. சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை அதிகமாகப் பார்க்க வேண்டும் என்று மக்கள் தங்களது விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இளம் வயதினர், அரசியலில் நேரடி தொடர்பில் இல்லாதவர்கள் மிக ஆர்வத்தோடு சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் தாங்கள் விரும்பித் தேர்ந்தெடுத்த முதலமைச்சரை நேரலையில் பார்க்க விரும்புகிறார்கள் என்பதை அறிந்துள்ளேன். சட்டப்பேரவை நிகழ்வுகள் முழுவதுமாக நேரலை செய்வது தொடர்பாக உரிய நேரத்தில் அறிவிப்புகள் வெளியிடப்படும்” என்று சபாநாயகர் ஜேடிசி பிரபாகர் தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தொடரில் 2026- 2027 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தவெக அரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் என்பதால் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் பொதுவாக காலை 09.30 மணிக்கு தொடங்கும் நிலையில், வரும் ஜூன் 18- ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தொடர் காலை 10.00 மணிக்கு தொடங்கும் என்று சபாநாயகர் அறிவித்துள்ளார். கடந்த காலங்களில் காலை 10.00 மணிக்கே சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடியது.

இருப்பினும், சட்டப்பேரவையில் மக்கள் பிரச்சனைகளை பேச கூடுதல் நேரம் தேவைப்படுவதாகக் கூறி, கடந்த திமுக ஆட்சியில் அவை விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டு கடந்த 2024- ஆம் ஆண்டு ஜூலை முதல் காலை 09.30 மணிக்கு கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article

தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர்: ஜூன் 18

தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

யாரேனும் தவறு செய்தால்’.. அதிர்ந்த அமைச்சர்கள்…

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூன் 05) காலை  அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. 'வெற்றி தமிழகம்' என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த அமைச்சரவைக் கூட்டத்தில்...

2031 தேர்தலில் போட்டி …புதிய அரசியல் இயக்கத்தை ஆரம்பித்தார் அண்ணாமலை.

தமிழ்நாட்டில் சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன், அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்தது. இதனையடுத்து, பாஜகவின் மாநிலத் தலைவர் பதவியில் இருந்த அண்ணாமலை மாற்றப்பட்டு அவருக்குப் பதில் புதிய தலைவராக நயினார்...

மகளிர் உரிமை தொகை… பெண்களுக்கு இனி மாதம் ₹3000..!

மேற்கு வங்க அரசு பெண்களுக்கான புதிய வரலாற்றுச் சிறப்புமிக்க நலத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 'அன்னபூர்ணா பண்டார்' என்ற பெயரில் அறிமுகமாகியுள்ள அன்னபூர்ணா யோஜனா 2026 திட்டத்தை முதலமைச்சர் சுவேந்து அதிகாரி ஹவுராவில்...

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஹார்டு டிஸ்க் திருட்டில் அதிகாரிகளுக்குப் பங்கா..?

அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரியத்தின் (TNEB) தலைமையகத்திலிருந்து, குறிப்பாக டெண்டர்கள் மற்றும் கொள்முதல்கள் மேலும் நடைபெற்று வரும் விசாரணைகள் தொடர்பான பதிவுகள் அடங்கிய, ரகசியத் தரவுகள் உள்ள சுமார்...