Sunday, September 13, 2026

தமிழ்நாட்டின் முதல் வன விலங்கு சிறப்பு சிகிச்சை மறுவாழ்வு மையம் – திறந்து வைத்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

Must read

ரூ.7 லட்சம் லஞ்சம்; சார்பதிவாளர் உட்பட இருவர் கைது

கவுந்தப்பாடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலத்தை பதிவு செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரின் பேரில், ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் கவுந்தப்பாடி சார்பதிவாளர்...

மதுபானக் கூட உரிமையாளர்களுக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை..

கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட FL-2 மற்றும் FL-3 மதுபானக் கூடங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகப் பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

கோவையில் உணவகத்திற்கு சீல்; 12 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் விதிமுறைகளைப் பின்பற்றாத உணவகத்திற்கு FSSAI சீல் வைத்துள்ளது, மேலும் 12 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது, இந்திய...

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்.6 இல் இடைத்தேர்தல்…

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

கோவை மாவட்டம், வடகோவையில் உள்ள தமிழ்நாடு வன உயர் பயிற்சியக வளாகத்தில், தமிழ்நாடு வனத்துறை சார்பில் அமைக்கப்பட்ட பல்வேறு புதிய திட்டங்களின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டனர். முன்னதாக, வனத்துறைக்காக புதிதாக வாங்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களை அவர் பார்வையிட்டார். பணியின்போது உயிர் நீத்த வனத்துறையினருக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து, ரூ.5.30 கோடி மதிப்பீட்டில் கோவையில் தமிழ்நாடு வனப்படை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் 123 துப்பாக்கிகள், 19 பிஸ்டல்கள் உள்ளிட்ட ஆயுதங்களை வனத்துறைக்கு வழங்கினார். மேலும், கோவை மாவட்டம் சிறுமுகை பெத்திக்குட்டை பகுதியில் ரூ.19.5 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள வன உயிரின இடமாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இது தமிழ்நாட்டில் வன விலங்குகளுக்காக அமைக்கப்பட்ட முதல் சிறப்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையமாகும். அதேபோல், ரூ.8 கோடி மதிப்பீட்டில் கோவை சாடிவயல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள யானை முகாம் மற்றும் ரூ.2 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட மின்னணு ஆவண காப்பக சேமிப்பகத்தையும் அவர் திறந்து வைத்தார். இந்த மின்னணு ஆவண காப்பகத்தின் மூலம் சுமார் 200 ஆண்டுகள் பழமையான ஆவணங்களை பார்வையிட முடியும்.

இந்த நிகழ்வை தொடர்ந்து ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ரூ.31.72 கோடி மதிப்பீட்டிலான 12 புதிய திட்டப்பணிகளுக்கு துணை முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

மேலும் பள்ளி விளையாட்டு மைதானத்தில் 6,500 சதுர மீட்டர் பரப்பளவில், ரூ.9.67 கோடி மதிப்பீட்டில் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை புல்வெளி தளத்துடன் கூடிய ஹாக்கி மைதானம் உட்பட ரூ.162.52 கோடி மதிப்பீட்டில் 107 முடிவுற்ற திட்டப் பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதையடுத்து 10,626 பயனாளிகளுக்கு ரூ.136.45 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.முன்னதாக விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “கோவைக்கு புத்தாண்டு பரிசாக ரூ.10 கோடி மதிப்பில் புதிய ஹாக்கி மைதானம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இனி சர்வதேச மற்றும் தேசிய அளவிலான ஹாக்கி போட்டிகள் இங்கும் நடைபெறும். SIHS காலனியில் உயர் மட்ட ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு 2010 ஆம் ஆண்டு கருணாநிதியால் அடிக்கல் நாட்டப்பட்டது ஆனால், அதிமுக ஆட்சியில் அதனை கிடப்பில் போட்டுவிட்ட நிலையில், தற்போது மீண்டும் அந்த மேம்பாலம் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

ரூ.7 லட்சம் லஞ்சம்; சார்பதிவாளர் உட்பட இருவர் கைது

கவுந்தப்பாடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலத்தை பதிவு செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரின் பேரில், ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் கவுந்தப்பாடி சார்பதிவாளர்...

மதுபானக் கூட உரிமையாளர்களுக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை..

கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட FL-2 மற்றும் FL-3 மதுபானக் கூடங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகப் பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

கோவையில் உணவகத்திற்கு சீல்; 12 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் விதிமுறைகளைப் பின்பற்றாத உணவகத்திற்கு FSSAI சீல் வைத்துள்ளது, மேலும் 12 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது, இந்திய...

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்.6 இல் இடைத்தேர்தல்…

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

திடக்கழிவு மேலாண்மை திட்டம் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம்

கோவை கூடலூர் நகராட்சியில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டம் புதிய விதிகளின்படி, வீடுகள், நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கழிவு உருவாக்குபவர்களும் குப்பைகளை உருவாகும் இடத்திலேயே நான்கு வகைகளாகப்...