Thursday, February 19, 2026

பயிர் உற்பத்தியில் தமிழ்நாடு தான் முதலிடம்…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்..!

Must read

விஜய் வேலூர் மக்கள் சந்திப்புக்கு 20 நிபந்தனைகள் விதித்த போலீசார்..!

வேலூர் அடுத்த அகரம்சேரியில் வரும் 23 ஆம்தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக 33 ஏக்கரில் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன....

மார்ச் 7 வேலூர் வரும் பிரதமர் மோடி: ஏற்பாடுகள் தீவிரம்

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை ( என்டிஏ) வலுப்படுத்தும் விதமாகவும், புதிய கட்சிகளை கூட்டணியில்...

தமிழ்நாட்டில் மார்ச் 16-இல் மாநிலங்களவை தேர்தல்: வெளியானது அறிவிப்பு

தமிழ்நாட்டில் விரைவில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல், மார்ச் 16ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாநிலங்களவையில் தமிழகத்திற்கு மொத்தம் 18 இடங்கள்...

பெண்கள் கணக்கில் ரூ.5,000 வரவு ; மகளிர் உரிமைத்தொகை இனி ரூ.2,000..!

தமிழ்நாட்டில் மகளிருக்கு வழங்கப்பட்டு வரும் ரூ.1000 உரிமைத் தொகையை, திராவிட மாடல் 2.Oவில் (அடுத்த திமுக ஆட்சியில்) ரூ.2,000ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும்,...

பயிர் உற்பத்தித் திறனில் இந்திய அளவில் தமிழ்நாடு தான் முதலிடத்தில் உள்ளது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ‘வேளாண் வணிகத் திருவிழா -2025’-ஐ சென்னை வர்த்தக மையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதில், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக செயல்பாடுகள் குறித்த கண்காட்சி அரங்குகள் மற்றும் கருத்தரங்கம் இடம்பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “வேளாண் விளைபொருட்களை, நேரடியாக சந்தைப்படுத்த இந்த கண்காட்சியும், கருத்தரங்குகளும் விவசாயிகளுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கிறது. இந்த முன்னெடுப்பு விவசாயிகளுக்கு புதிய சாகுபடி முறைகள் மற்றும் வேளாண் வணிக வாய்ப்புகளை பற்றி தெரிந்து கொள்வதற்கான முக்கிய தளமாக அமைந்திருக்கிறது. இதனால், உள்நாட்டு மற்றும் பன்னாட்டு சந்தை வாய்ப்புகள் உருவாகுவதோடு, ஏற்றுமதிக்கான வாய்ப்பு இன்னும் அதிகளவில் ஏற்படும். வேளாண் வணிகம் தொடர்பான கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிகளால், விவசாயிகளின் வணிகத்திறன் மேம்படும்.
திமுக அரசு அமைந்த பிறகு, வேளாண்மைத் துறை என்று இருந்த பெயரை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை என மாற்றி, நம்முடைய அரசின் நோக்கம் என்னவென்று எல்லோருக்கும் அறிவித்தோம். அப்படித்தான், நம்முடைய அரசின் ஒவ்வொரு திட்டங்கள் மூலமாகவும், வேளாண்மையும் அதிகரிக்க வேண்டும்; உழவர்களின் வாழ்க்கைத்தரமும் மேம்படவேண்டும் என்று பார்த்து பார்த்து செய்து கொண்டிருக்கிறோம். உழவர்களின் கருத்துக்களை விருப்பத்தை கேட்டு, செயல்படும் அரசாக இருந்து கொண்டிருக்கிறோம்.தமிழ்நாடு முழுவதும் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தி, அதனடிப்படையில் திட்டங்களை, வேளாண் நிதிநிலை அறிக்கைகளில் அறிவித்தோம். அதன் பலனாக இப்போது வேளாண்மையில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்து வருகிறது. முன்பெல்லாம், குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையை திறப்பதற்கு எப்படி லேட் ஆகும் என்று உங்களுக்கெல்லாம் நன்றாக தெரியும். நம்முடைய திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு, மேட்டூர் அணையை குறித்த நாளில் திறந்து கொண்டிருக்கிறோம். இந்த ஆண்டு, 5.66 லட்சம் ஹெக்டேரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இது கடந்த ஆண்டைவிட ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 494 ஏக்கர் கூடுதல் நெல் சாகுபடி ஆகும். இதற்கு தேவையான உரங்களை தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள். இப்படி, தமிழ்நாட்டில் உழவர்களுக்கோ, வேளாண்மைக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்ற முனைப்புடன் செயல்பட்டு கொண்டிருக்கிறோம்.தமிழ்நாடு முதலிடம், இந்த 4 ஆண்டு கால சாதனைகளையெல்லாம் சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், பயிர் உற்பத்தித் திறனில், இந்திய அளவில் தமிழ்நாடு தான் முதலிடம்; மக்காச்சோளம், மொத்த எண்ணெய் வித்துக்கள் மற்றும் கரும்பில் இரண்டாம் இடம்; குறு தானியங்கள் மற்றும் நிலக்கடலையில் மூன்றாம் இடம். இதிலும், நாம் முதலிடம் நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.

திமுகவின் சில சாதனைகள்

கடந்த நான்கு ஆண்டுகளில், தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 130 லட்சம் மெட்ரிக் டன் வேளாண் விளைபொருட்கள், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பரிவர்த்தனை செய்யப்பட்டிருக்கிறது. விவசாயிகளின் பொருளீட்டுக் கடனை 3 லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தியிருக்கிறோம்.
டெல்டா மாவட்டங்களில் ஒரு லட்சத்து 45 ஆயிரம் மெட்ரிக் டன் பருத்தி விற்பனை
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் ரூ.5.17 கோடி மதிப்பில் புதிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்
ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் ஏற்றுமதி மையம்
ரூ.285 கோடியில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கட்டமைப்பு வசதிகள், 14 புதிய உழவர் சந்தைகள்
ஏற்கனவே இருந்த 125 உழவர் சந்தைகளில் புனரமைப்பு பணிகள், மாநகராட்சிப் பகுதிகளில் 30 நடமாடும் காய்கனி அங்காடிகள்
நீலகிரியில் சிறுதானியங்கள் பதப்படுத்தும் நிலையம்
உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் வணிகம் செய்வதற்கு ரூ.73 கோடி நிதியுதவி
உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் புதிதாக தொழில் தொடங்குவதற்கு ரூ.53 கோடி மானியம்
விலை வீழ்ச்சி காலங்களில் விவசாயிகளை பாதுகாக்க குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல்
திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் மெகா உணவுப் பூங்கா; கடலூர், கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, திண்டுக்கல், தேனி, மதுரையில் சிறிய உணவுப் பூங்கா
பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் 32 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.5,720 கோடி இழப்பீட்டு தொகை வேளாண் பணிகள் எவ்விதத் தொய்வுமில்லாமல் நடைபெற, வேளாண்மையில் இயந்திரமயமாக்கல் திட்டம்
வேளாண்மை கல்வியை மேம்படுத்தும் வகையில் நாகப்பட்டினம், சிவகங்கை, கரூர் ஆகிய மாவட்டங்களில் 3 புதிய அரசு வேளாண்மைக் கல்லூரிகள். இதன் தொடர்ச்சியாக, தற்போது வேளாண் வணிகத் திருவிழா சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

விவசாயிகளைத் தொழில் முனைவோர்களாக மாற்றி புதிய ஏற்றுமதியாளர்களாக அவர்களை உருவாக்குவோம். அதற்காகத்தான் இந்த நிகழ்ச்சி. இதை உழவர் பெருமக்கள் எல்லோரும் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். இந்த வேளாண் வணிகத் திருவிழா விவசாயிகள், கல்லூரி மாணவர்கள், உணவு பதப்படுத்துபவர்கள், வேளாண் ஏற்றுமதியாளர்கள் மற்றும் பொதுமக்கள் எல்லோருக்கும் மிகவும் பயனுள்ளதாக நிச்சயமாக இருக்கும். உழவுத் தொழிலுக்கும், வேளாண் தொடர்புடைய அனைத்து தரப்பினருக்கும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஊக்கமளிக்க வேண்டும்” என உரையாற்றினார்.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

விஜய் வேலூர் மக்கள் சந்திப்புக்கு 20 நிபந்தனைகள் விதித்த போலீசார்..!

வேலூர் அடுத்த அகரம்சேரியில் வரும் 23 ஆம்தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக 33 ஏக்கரில் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன....

மார்ச் 7 வேலூர் வரும் பிரதமர் மோடி: ஏற்பாடுகள் தீவிரம்

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை ( என்டிஏ) வலுப்படுத்தும் விதமாகவும், புதிய கட்சிகளை கூட்டணியில்...

தமிழ்நாட்டில் மார்ச் 16-இல் மாநிலங்களவை தேர்தல்: வெளியானது அறிவிப்பு

தமிழ்நாட்டில் விரைவில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல், மார்ச் 16ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாநிலங்களவையில் தமிழகத்திற்கு மொத்தம் 18 இடங்கள்...

பெண்கள் கணக்கில் ரூ.5,000 வரவு ; மகளிர் உரிமைத்தொகை இனி ரூ.2,000..!

தமிழ்நாட்டில் மகளிருக்கு வழங்கப்பட்டு வரும் ரூ.1000 உரிமைத் தொகையை, திராவிட மாடல் 2.Oவில் (அடுத்த திமுக ஆட்சியில்) ரூ.2,000ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும்,...

கல்விக் கடன் தள்ளுபடி , முதியோர் ஓய்வூதியம் ரூ.2,000 – அதிமுகவின் 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்

வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகள் விறுவிறுப்படைந்துள்ள சூழலில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், கட்சியின் மாவட்டச் செயலர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த...