Wednesday, July 22, 2026

கோவையில் குப்பைகளை மின்சாரமாக்கும் திட்டம்..!

Must read

பழநியில் ரூ.100 கோடி நிலம் முறைகேடு: நிலம் விற்றவர், வாங்கியோர் தலைமறைவுசிபிசிஐடி தீவிர தேடுதல் வேட்டை

பழநியில் ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு பயந்து நிலத்தை விற்றவர், வாங்கியவர்கள் என 3 பேர் தலைமறைவாகினர். அவர்களைத் தேடும் பணியை...

டிஜிட்டல் லஞ்சம்,கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தில் ‘ரெய்டு’ 

லஞ்சப் பணத்தைக் கண்டுபிடிக்க அதிகாரிகளின் ஆன்லைன் கணக்குகளை டிராக்கிங் செய்த போலீசார், ₹5,000 ரொக்கமும் பறிமுதல், விடிய, விடிய நடந்த விசாரணை !!! தமிழ்நாடு முழுவதும்...

கோவையில் அடகு கார் விவகாரத்தில் ₹70 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காட்டூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அதிரடி கைது.

திருநெல்வேலி அருகே உள்ள மேலக்கரையை சேர்ந்தவர் ருஜைனா பாத்திமா. இவருடைய கணவர் புதிய கார் வாங்கியுள்ளார். பண பிரச்சினைக்காக அந்த காரை ரவிக்குமார் என்பவரிடம் அடமானம் வைத்தாக தெரிகிறது. அந்த...

2 வருஷ படிப்பை இழுத்தடிக்கும் நிர்வாகம்; புத்தகம் இல்லை, வகுப்பும் இல்லை, ஆனால் அபராதம் மட்டும் ₹300 வசூலிப்பதா ? என மாணவர்கள் கடும் கொதிப்பு !!!

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தொலைதூரக் கல்வி முறையில் பல்வேறு முதுகலை படிப்புகளில் படித்து வருகின்றனர் . ஏற்கனவே இரண்டு வருடங்களில் முடிக்க வேண்டிய படிப்பை,...

இன்று கோவை வந்த தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு, கோவை நகரில் நடைபெறும் அத்துறை சார்ந்த பல்வேறு திட்டப்பணிகளை ஆய்வு செய்தார்.

கோவை செம்மொழிப் பூங்கா திட்ட பணிகள், ஆர்.எஸ்.புரம் ஹாக்கி ஸ்டேடியம் திட்ட பணிகள், கவுண்டம்பாளையம் பகுதியில் கட்டப்பட்டு வரும் புது கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் மற்றும் குப்பை மாற்று நிலையம், குறிச்சி குனியமுத்தூர் பாதாள சாக்கடை திட்டம் மற்றும் குடிநீர் திட்டம் ஆகியவற்றை ஆய்வு செய்யவும், கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாதிரி பள்ளியில் ரூ. 2.92 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புது மாணவர்கள் தங்கும் விடுதி மற்றும் ரூ.1.96 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புது வகுப்பறைகளை திறந்து வைக்கவும், உக்கடம் பேருந்து நிலையத்தை ரூ.21.55 கோடி மதிப்பீட்டில் நவீன முறையில் புதுப்பிக்கும் பனிக்கடிக்கல் நட்டவும், வெள்ளலூர் குப்பை கிடங்கில் ரூ.69.20 கோடி மதிப்பீட்டில் இயற்கை எரிவாயு மையம் அமைக்கும் பணியை துவங்கி வைக்கவும் இன்று அமைச்சர் கோவை வந்தார்.

இதற்கு நடுவே செய்தியாளர்களை அவர் சந்தித்தபோது;

கோவை செம்மொழிப் பூங்கா திட்டப் பணிகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தொகை தாண்டி ரூ.50 கோடிக்கு மேல் செலவு செய்ய வேண்டும் என்ற நிலை உள்ளதாக கோவை மாநகராட்சி தரப்பில் தன்னிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். இது குறித்து முதலமைச்சர் உடைய அனுமதி பெற்று, நிதி வழங்கி இந்த பணியை முடிப்பதற்கான நடவடிக்கை எடுப்பதற்காக இன்று ஆய்வுகள் நடைபெற்றதாக கூறினார். வெள்ளலூர் குப்பை கிடங்கில் சேரும் கழிவுகளால் நிலத்தடி நீரும் மாசடைவது பற்றி அவரிடம் கேட்டபோது, குப்பை கிடங்கு பிரச்சனைக்கு தீர்வு காணும் விதத்தில் இன்று சுமார் ரூ.70 கோடி செலவில் பயோ மைனிங் செய்து அதை சுத்தப்படுத்தும் பணிகளை இன்று துவங்குகிறோம் என்று கூறினார்.

கோவையில் ‘ வேஸ்ட் டு எனர்ஜி’ என்கின்ற திட்டத்தின் கீழ் ரூ.250 கோடி மதிப்பில் பிளாஸ்டிக் கழிவுகளை எடுத்து அதை மின்சாரமாக மற்றும் திட்டத்தை மக்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளோம் எனவும் மீதமுள்ள மக்கும் குப்பைகளை உரமாக்கி கொடுக்கக் கூடிய திட்டத்தையும் கோவை மற்றும் மதுரையில் ஆரம்பிக்க உள்ளோம் என்று கூறினார்.

கோவை மாவட்டத்தில் பொதுமக்களிடம் வசூலிக்கப்படும் வரி அளவு உயர்ந்துள்ளதாக எதிர்க்கட்சிகளிடமிருந்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாளிதழ்களில் செய்திகள் வருகிறது. இது பற்றி அமைச்சரிடம் கேட்ட போது, கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களைக் காட்டிலும் குறைந்த வரியே தமிழகத்தில் பெறப்படுகிறது என்று கூறினார். குப்பை வரியோ மற்றும் இதர வரிகளோ ஏற்கனவே அறிவிக்கப்பட்டதை தாண்டி அதிகமாக இருக்க வாய்பில்லை என்றார்.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

பழநியில் ரூ.100 கோடி நிலம் முறைகேடு: நிலம் விற்றவர், வாங்கியோர் தலைமறைவுசிபிசிஐடி தீவிர தேடுதல் வேட்டை

பழநியில் ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு பயந்து நிலத்தை விற்றவர், வாங்கியவர்கள் என 3 பேர் தலைமறைவாகினர். அவர்களைத் தேடும் பணியை...

டிஜிட்டல் லஞ்சம்,கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தில் ‘ரெய்டு’ 

லஞ்சப் பணத்தைக் கண்டுபிடிக்க அதிகாரிகளின் ஆன்லைன் கணக்குகளை டிராக்கிங் செய்த போலீசார், ₹5,000 ரொக்கமும் பறிமுதல், விடிய, விடிய நடந்த விசாரணை !!! தமிழ்நாடு முழுவதும்...

கோவையில் அடகு கார் விவகாரத்தில் ₹70 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காட்டூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அதிரடி கைது.

திருநெல்வேலி அருகே உள்ள மேலக்கரையை சேர்ந்தவர் ருஜைனா பாத்திமா. இவருடைய கணவர் புதிய கார் வாங்கியுள்ளார். பண பிரச்சினைக்காக அந்த காரை ரவிக்குமார் என்பவரிடம் அடமானம் வைத்தாக தெரிகிறது. அந்த...

2 வருஷ படிப்பை இழுத்தடிக்கும் நிர்வாகம்; புத்தகம் இல்லை, வகுப்பும் இல்லை, ஆனால் அபராதம் மட்டும் ₹300 வசூலிப்பதா ? என மாணவர்கள் கடும் கொதிப்பு !!!

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தொலைதூரக் கல்வி முறையில் பல்வேறு முதுகலை படிப்புகளில் படித்து வருகின்றனர் . ஏற்கனவே இரண்டு வருடங்களில் முடிக்க வேண்டிய படிப்பை,...

கரூரில் 3,084 ஏக்கர் இனாம் நிலங்கள் யாருடைய பெயரில் உள்ளன?

கரூர் மாவட்ட 3,084.95 ஏக்கர் இனாம் நிலங்கள் குறித்த வழக்கில் சம்பந்தப்பட்ட நிலம் யாருடைய பெயரில் உள்ளன என்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. இனாம் நிலங்களுக்கு பதிவுத்துறை...