13 மாவட்டங்களில் உள்ள 19 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் கட்டப்பட்டுள்ள 1,591 வீடுகளைத் தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.

தமிழகம் முழுவதும் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களுக்கு புதிய வீடுகள் கட்டும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021 ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார். வேலூர் உள்பட 13 மாவட்டங்களில் 19 முகாம்களில் 79 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பில் 1, 591 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன.
புதிதாக கட்டப்பட்ட வீடுகளை பயனாளிகளிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி வேலூரை அடுத்த மேல்மொணவூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் இன்று நடைபெற்றது. இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, வேலூர் முகாமில் 11 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட 220 வீடுகளை வீடுகளை திறந்து வைத்தார். 5 பயனாளிகளுக்கு வீட்டின் சாவியை அவர் வழங்கினார்.


