Tuesday, February 17, 2026

விஜய்க்கு கூடும் கூட்டம் தேர்தலில் ஓட்டாக மாறுமா? ஜான் பாண்டியன்

Must read

பெண்கள் கணக்கில் ரூ.5,000 வரவு ; மகளிர் உரிமைத்தொகை இனி ரூ.2,000..!

தமிழ்நாட்டில் மகளிருக்கு வழங்கப்பட்டு வரும் ரூ.1000 உரிமைத் தொகையை, திராவிட மாடல் 2.Oவில் (அடுத்த திமுக ஆட்சியில்) ரூ.2,000ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும்,...

கல்விக் கடன் தள்ளுபடி , முதியோர் ஓய்வூதியம் ரூ.2,000 – அதிமுகவின் 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்

வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகள் விறுவிறுப்படைந்துள்ள சூழலில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், கட்சியின் மாவட்டச் செயலர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த...

கமல் ஹாசன் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த தடையை நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவு…

நடிகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கமல் ஹாசன் (71) திரைத்துறையில் நாயகன், இயக்குநர், ஒளிப்பதிவாளர், கதாசிரியர், பாடகர் என பன்முகதன்மையுடன் சுமார் 65 ஆண்டுகளாக நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம்,...

ரயிலில் அடிபட்டு 4 வயது ஆண் யானை உடல் சிதறி உயிரிழப்பு…

மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கிறது கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டம். இந்த மலைத்தொடர் தான் கேரள - தமிழக எல்லையாகவும் திகழ்கிறது. கோவையிலிருந்து கேரளாவிற்கு செல்லும் பாசஞ்சர், விரைவு மற்றும்...

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் தமிழக மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் ஜான் பாண்டியன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். நிகழ்ச்சியில் 4 கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான கல்வி உதவித்தொகை, 25 பெண்களுக்கு வாழ்வாதார உதவிக்கு தையல் இயந்திரம், சலவை தொழிலாளர்களுக்கு இஸ்திரி பெட்டி, விவசாயிகளுக்கு மருந்தடிக்கும் இயந்திரம், 200 பேருக்கு அரிசி, பருப்பு, வேஷ்டி சேலைகள் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதை தொடர்ந்து ஜான் பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ”தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயற்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளது. அதன் பின்னர் யாருடன் கூட்டணி? என்பது குறித்து தெரிவிப்போம். எந்தத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தாலும் அது நல்ல திட்டம் என்றால் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். எதிர்க்கட்சி என்பதால் திமுக உள்ளிட்டவர்கள் எதிர்க்க வேண்டும் என்பதற்காக எதையாவது சொல்வார்கள்.நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கனிமவள கொள்ளை அதிகமாக இருக்கிறது. இதனை தடுக்க அந்த பகுதி மக்கள் வெகுண்டு எழ வேண்டும். விஜய்க்கு கூடும் கூட்டம் தேர்தலில் ஓட்டாக மாறாது. மக்கள் கூட்டத்தை வைத்து ஒரு முடிவுக்கு வர முடியாது. அவர் வரட்டும். தேர்தலை சந்திக்கட்டும். அரசியல் சூழ்நிலையை பொறுத்து தேர்தல் நேரத்தில் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி அமையும்.
விரைவில் தமிழ்நாட்டிற்கு வர இருக்கும் பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள், அனைத்து கூட்டணி கட்சியினரும் ஒரே மேடையில் சந்திப்போம் என கூறியுள்ளார்கள். எனக்கு இதுவரை அழைப்பு வரவில்லை அழைப்பு வந்தால் கண்டிப்பாக கலந்து கொள்வேன். தமிழ்நாட்டை பொறுத்தவரையில் அதிமுக, திமுக என்ற 2 கட்சிகள் இடையே தான் போட்டி. மூன்றாவது, நான்காவது அணிகள் போட்டிக்கு வராது.பெண்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை என்று கூறுகிறீர்கள். பெண்களை பெண்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதேபோல் மதுக்கடைகள் நாட்டில் இருக்க தான் செய்யும். பெற்றோர் குழந்தைகளை சரியாக வளர்க்கும் பட்சத்தில் அவர்கள் ஏன் மதுவுக்கு அடிமையாக போகிறார்கள்? அனைத்துக்கும் அரசை குறை கூறக்கூடாது. நடிகர் விஜய் ஏழைகளுக்கு வீடு வழங்கப்படும் என்று கூறியுள்ளார். தேர்தல் அறிக்கையை யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம். அனைத்தையும் நிறைவேற்றி விட முடியாது” என்று ஜான் பாண்டியன் தெரிவித்தார்.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

பெண்கள் கணக்கில் ரூ.5,000 வரவு ; மகளிர் உரிமைத்தொகை இனி ரூ.2,000..!

தமிழ்நாட்டில் மகளிருக்கு வழங்கப்பட்டு வரும் ரூ.1000 உரிமைத் தொகையை, திராவிட மாடல் 2.Oவில் (அடுத்த திமுக ஆட்சியில்) ரூ.2,000ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும்,...

கல்விக் கடன் தள்ளுபடி , முதியோர் ஓய்வூதியம் ரூ.2,000 – அதிமுகவின் 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்

வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகள் விறுவிறுப்படைந்துள்ள சூழலில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், கட்சியின் மாவட்டச் செயலர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த...

கமல் ஹாசன் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த தடையை நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவு…

நடிகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கமல் ஹாசன் (71) திரைத்துறையில் நாயகன், இயக்குநர், ஒளிப்பதிவாளர், கதாசிரியர், பாடகர் என பன்முகதன்மையுடன் சுமார் 65 ஆண்டுகளாக நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம்,...

ரயிலில் அடிபட்டு 4 வயது ஆண் யானை உடல் சிதறி உயிரிழப்பு…

மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கிறது கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டம். இந்த மலைத்தொடர் தான் கேரள - தமிழக எல்லையாகவும் திகழ்கிறது. கோவையிலிருந்து கேரளாவிற்கு செல்லும் பாசஞ்சர், விரைவு மற்றும்...

வரும் 6ஆம் தேதி முதல் விருப்பமான பெற்றுக் கொள்ளலாம் தவெக அறிவிப்பு..!

சட்டப் தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட விரும்புவோர் பிப்ரவரி 6 முதல் விருப்ப மனு பெற்றுக் கொள்ளலாம் என அக் கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அறிவித்துள்ளார்.