கடந்த சில நாட்களாக இந்தியாவில் கோதுமை விலை ஏறி வருகிறது.
இதை கட்டுப்படுத்த இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி செய்வதை தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இருப்பினும் பிற நாடுகள் ஏற்கெனவே ஏற்றுமதி செய்யப்படும் கோதுமைக்கான தொகையை செலுத்தியதற்கான கடிதம் இருந்தால், அந்த நாடுகளுக்கு மத்திய அரசின் அனுமதியுடன் கோதுமையை ஏற்றுமதி செய்யலாம் என கூறியுள்ளது.


