Saturday, April 11, 2026

திருப்பரங்குன்றம் மலை தர்கா சந்தனக்கூடு விழா கொடியேற்றத்துக்கு அனுமதி – பாஜக கடும் எதிர்ப்பு

Must read

தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக ஆட்சி- வேட்பு மனு தாக்களின் போது எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை..

அதிமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி, சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் இன்று தனது...

கோவை வடக்கு தொகுதியில் ராஜஸ்தான் முதல்வர், அண்ணாமலை முன்னிலையில்  வானதி சீனிவாசன் வேட்பு மனுத் தாக்கல் !!!

தேசிய ஜனநாயக கூட்டணியின் கட்சியினர் - மேளதாளங்கள் முழங்க, ஆதரவாளர்கள் படைசூழ வேட்பு மனு தாக்கல் செய்தார் வானதி சீனிவாசன் !!! கோவை வடக்கு சட்டமன்றத்...

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களுக்கு கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட பா.ஜ.க வினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களாக கோவை வடக்கு மற்றும் அவிநாசி தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ மற்றும் மத்திய இணை...

வானதி vs அண்ணாமலை.. எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு வைத்த செக்.. நடுவில் செந்தில் பாலாஜி

அரசியல் சதுரங்க வேட்டை என்பது எல்லா கட்சிகளும் மேற்கொள்வது தான். இந்த முறை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவை மண்டலத்தை வைத்து வைத்த நகர்வு மிகப்பெரிய ராஜதந்திரமாகவே...

திருப்பரங்குன்றம் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்கா சந்தனக்கூடு விழா இந்து முன்னணி, பாஜகவினரின் பலத்த எதிர்ப்புக்கு இடையே கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மலையில் ஏற்றப்படும் கொடி கம்பத்தை காவல்துறை பாதுகாப்புடன் பத்துக்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஊர்வலமாக கொண்டு சென்றதால் மலைக்குச் செல்லும் பாதையில் உள்ள மக்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள தூணில் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இந்த நிலையில் வருகிற ஜனவரி 6 ஆம் தேதி பெரிய ரத வீதியில் உள்ள சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்கா சந்தனக்கூடு விழா நடைபெற உள்ளது.
இதற்காக 21 ஆம் தேதி மலை மேல் உள்ள தர்காவில் கொடியேற்ற நிகழ்வை நடத்துவதற்காக இஸ்லாமிய சமூகத்தினர் சார்பில் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன் திருமங்கலம் கோட்டாட்சியர் சிவஜோதி முன்னிலையில் நடைபெற்ற சமாதான கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டது.
கோட்டாட்சியர் உத்தரவைத் தொடர்ந்து 20 ஆம் தேதி மலை மேல் உள்ள தர்கா கொடிக்கம்பத்தை பழுது பார்ப்பதற்காக மலைப்பாதை வழியாக இஸ்லாமியர்கள் அனுமதிக்கப்பட்டனர். அப்போது மலைப்பாதையில் உள்ள பழனி ஆண்டவர் கோவில் தெருவை சேர்ந்த பகுதி மக்கள் அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் 12 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

அகல் விளக்கேற்றி போராட்டம்

இதனைத் தொடர்ந்து சந்தனக்கூடு கொடியேற்ற விழாவை முன்னிட்டு மலைக்குச் செல்லும் பாதையில் நேற்று காலை 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். போலீஸ் பாதுகாப்புடன் மலைக்கு செல்ல இஸ்லாமியர்கள் 100 பேருக்கு அனுமதி அளித்துள்ளதாக தகவல் பரவியது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள், காவல் துறையின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மலையடிவாரத்தில் உள்ள தங்களை மலைக்குச் செல்ல அனுமதிக்காமல் வெளியூரில் இருந்து வரக்கூடிய இஸ்லாமியர்களை எப்படி அனுமதிக்கலாம் என கூறி கையில் அகல் விளக்குடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்தவர்களை திருநகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். அவர்களை பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா உள்ளிட்டோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர்தொடர்ந்து கைது செய்யப்பட்ட பெண்கள் மற்றும். பொதுமக்களை மாலை 6 மணியை கடந்தும் விடுவிக்காததால் அவர்களை விடுவிக்க கோரி பாஜகவினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் திருமங்கலம் – மதுரை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. இருப்பினும் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை கைது செய்து போலீசார் அவர்களை தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.

சந்தனகூடு விழா தொடக்கம்

இந்த நிலையில் சந்தனக்கூடு விழா பெரிய ரத வீதியில் உள்ள தர்காவில் இரவு 8 மணி அளவில் தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் கொடி எடுத்துச் செல்லப்பட்டு பெரிய ரத வீதி, கீழ ரத வீதி, 16 கால் மண்டபம் வழியாக மீண்டும் பள்ளிவாசலை அடைந்தது. மாட்டு வண்டியில் எடுத்துச் செல்லப்பட்ட கொடி பள்ளிவாசலில் தொழுகைக்கு பின்னர் ஏற்றப்பட்டது. இதனிடையே,ஏற்கனவே மலை மேல் ஏற்றக்கூடிய கொடிக்கம்பத்தை பத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள்
காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் மலைப்பாதை வழியாக மலை மேல் உள்ள தர்காவிற்கு கொண்டு சென்றனர்.அப்போது, மலைக்கு செல்ல தங்களை அனுமதிக்காமல் இஸ்லாமியர்களை மட்டும் எப்படி அனுமதிக்கலாம் எனக்கூறி, பழனி ஆண்டவர் கோவில் தெருவில் உள்ள குடியிருப்புவாசிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.‌ இஸ்லாமியர்களை மட்டும் அனுமதிக்கும் காவல்துறை தங்களை ஏன் தீபம் ஏற்ற அனுமதிக்கவில்லை? என போராட்டக்காரர்கள் கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து அப்பகுதி மக்கள், தங்கள் கையில் அகல் விளக்கை ஏந்தி, மலை மேல் தீபம் ஏற்ற செல்வதாக கூறி ‘அரோகரா’ கோஷமிட்டு காவல்துறையினர் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தடுப்பை தாண்டி செல்ல முயன்றனர். காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தியதால் இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மற்றொரு பாதையில் கையில் அகல் விளக்குகளுடன் சென்று தீபம் ஏற்ற முயற்சித்தவர்களை காவல்துறை தடுத்தி நிறுத்தினர். இதனையடுத்து தாங்கள் கொண்டு வந்த தீபத்தை பழனியாண்டவர் கோவிலில் ஏற்ற அனுமதி தாருங்கள் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து ஒருவருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு, பெண் ஒருவர் கோயில் முன் விளக்கேற்றி வழிபாடு செய்தார்.

பல்வேறு பரபரப்புகளுக்கு பின் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தர்காவில் சந்தனக்கூடு திருவிழாவையொட்டி கொடியேற்றப்பட்டது. அதேசமயம் மலை அடிவாரத்தில் உள்ள மக்கள் மலை மீது தீபம் ஏற்ற வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக ஆட்சி- வேட்பு மனு தாக்களின் போது எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை..

அதிமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி, சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் இன்று தனது...

கோவை வடக்கு தொகுதியில் ராஜஸ்தான் முதல்வர், அண்ணாமலை முன்னிலையில்  வானதி சீனிவாசன் வேட்பு மனுத் தாக்கல் !!!

தேசிய ஜனநாயக கூட்டணியின் கட்சியினர் - மேளதாளங்கள் முழங்க, ஆதரவாளர்கள் படைசூழ வேட்பு மனு தாக்கல் செய்தார் வானதி சீனிவாசன் !!! கோவை வடக்கு சட்டமன்றத்...

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களுக்கு கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட பா.ஜ.க வினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களாக கோவை வடக்கு மற்றும் அவிநாசி தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ மற்றும் மத்திய இணை...

வானதி vs அண்ணாமலை.. எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு வைத்த செக்.. நடுவில் செந்தில் பாலாஜி

அரசியல் சதுரங்க வேட்டை என்பது எல்லா கட்சிகளும் மேற்கொள்வது தான். இந்த முறை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவை மண்டலத்தை வைத்து வைத்த நகர்வு மிகப்பெரிய ராஜதந்திரமாகவே...

தமிழ்நாடு சட்டம் – ஒழுங்கு புதிய டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்

2026 தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், தமிழக காவல்துறை உயரதிகாரிகளை மாற்றி இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அதிரடி...