Thursday, April 9, 2026

நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய ராஜராஜ சோழனின் 1040வது சதய விழா..!

Must read

தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக ஆட்சி- வேட்பு மனு தாக்களின் போது எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை..

அதிமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி, சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் இன்று தனது...

கோவை வடக்கு தொகுதியில் ராஜஸ்தான் முதல்வர், அண்ணாமலை முன்னிலையில்  வானதி சீனிவாசன் வேட்பு மனுத் தாக்கல் !!!

தேசிய ஜனநாயக கூட்டணியின் கட்சியினர் - மேளதாளங்கள் முழங்க, ஆதரவாளர்கள் படைசூழ வேட்பு மனு தாக்கல் செய்தார் வானதி சீனிவாசன் !!! கோவை வடக்கு சட்டமன்றத்...

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களுக்கு கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட பா.ஜ.க வினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களாக கோவை வடக்கு மற்றும் அவிநாசி தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ மற்றும் மத்திய இணை...

வானதி vs அண்ணாமலை.. எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு வைத்த செக்.. நடுவில் செந்தில் பாலாஜி

அரசியல் சதுரங்க வேட்டை என்பது எல்லா கட்சிகளும் மேற்கொள்வது தான். இந்த முறை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவை மண்டலத்தை வைத்து வைத்த நகர்வு மிகப்பெரிய ராஜதந்திரமாகவே...

உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் ராஜராஜ சோழனின் சதய விழா நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.

தஞ்சாவூரை ஆண்ட மாமன்னன் இராஜராஜசோழனின் 1040வது ஆண்டு சதய விழா இன்று (அக்.31) மற்றும் நாளை (நவ 1) ஆகிய இரண்டு நாட்களில் தஞ்சாவூர் பெரிய கோயில் வளாகத்தில் வெகு விமர்சையாக தொடங்கியது. இவ்விழாவில் தொடக்க நாளான இன்று கலை பண்பாட்டுத் துறை, தஞ்சாவூர் மண்டலம் சார்பில், தஞ்சாவூர் அரண்மனை வளாகத்திலிருந்து நாட்டுப்புற கலை நிகழ்ச்சியோடு பேரணியாக வலம் வந்து பெரிய கோயில் நந்தி மண்டபத்தில் நிறைவடைகிறது.
இப்பேரணியில் கொம்பு வாத்தியம், சிலம்பாட்டம், புலியாட்டம், கும்மிக் கோலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், நையாண்டி மேள நாதசுரம், தவில், கரகாட்டம், மாடு ஆட்டம், மயிலாட்டம் ஆகியவை நடைபெற்றது. மேலும் தேவலோக நடனங்களான சிவன், பார்வதி, காளி, பச்சைக்காளி, பவளக்காளி, அரக்கன், கருப்பு ஆகியவையும், வள்ளித் திருமண வேடத்திலும் வலம் வருதல் நிகழ்வும், பம்பை கைச்சிலம்பாட்டம், மற்றும் பெரியமேளம் போன்ற கலைகளில் 250க்கும் மேற்பட்ட கலைஞர்களைக் கொண்டு கலை ஊர்வல பேரணியாக நடைபெற்றது. மேலும், இந்த ஊர்வல நிகழ்ச்சியில் அக்கால இராஜராஜ சோழனின் நகர்வலத்தை இக்கால தலைமுறைக்கு நினைவுப்படுத்தும் வகையில், குதிரை பூட்டப்பட்ட தங்கரதம், இராஜஇராஜ சோழன் வேடம், அமைச்சர்கள் வேடம், வாயில்காவலர்கள் வேடம் ஆகியவற்றில் வேடமிட்ட கலைஞர்கள் பங்குபெறும் ஊர்வல நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை எம்பி முரசொலி, எம்எல்ஏ சந்திரசேகரன், மேயர் இராமநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் சதய விழா குழு தலைவர் செல்வம், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, தஞ்சாவூர் மண்டலக் கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநர் இராஜாராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு 1040வது சதய விழா 2 நாட்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் தேவார திருமுறை அரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக ஆட்சி- வேட்பு மனு தாக்களின் போது எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை..

அதிமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி, சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் இன்று தனது...

கோவை வடக்கு தொகுதியில் ராஜஸ்தான் முதல்வர், அண்ணாமலை முன்னிலையில்  வானதி சீனிவாசன் வேட்பு மனுத் தாக்கல் !!!

தேசிய ஜனநாயக கூட்டணியின் கட்சியினர் - மேளதாளங்கள் முழங்க, ஆதரவாளர்கள் படைசூழ வேட்பு மனு தாக்கல் செய்தார் வானதி சீனிவாசன் !!! கோவை வடக்கு சட்டமன்றத்...

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களுக்கு கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட பா.ஜ.க வினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களாக கோவை வடக்கு மற்றும் அவிநாசி தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ மற்றும் மத்திய இணை...

வானதி vs அண்ணாமலை.. எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு வைத்த செக்.. நடுவில் செந்தில் பாலாஜி

அரசியல் சதுரங்க வேட்டை என்பது எல்லா கட்சிகளும் மேற்கொள்வது தான். இந்த முறை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவை மண்டலத்தை வைத்து வைத்த நகர்வு மிகப்பெரிய ராஜதந்திரமாகவே...

தமிழ்நாடு சட்டம் – ஒழுங்கு புதிய டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்

2026 தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், தமிழக காவல்துறை உயரதிகாரிகளை மாற்றி இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அதிரடி...