பாமகவில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ்க்கும் அவரது மகனும் பாமக தலைவருமான அன்பு மணிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இரு தரப்பும் கட்சிக்கு உரிமை கொண்டாடினர். ஆவணங்களின் அடிப்படையில் பாமகவின் மாம்பழம் சின்னம் மற்றும் கொடி ஆகியவற்றை அன்புமணி தரப்பே பயன்படுத்தலாம் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து பாமக நிறுவனர் ராமதாஸ் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், எதன் அடிப்படையில் அன்புமணிக்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்கியது. தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் ஒரு ஃபிரண்ட்லி மேட்ச் ஆடியுள்ளது என்று கருத்து கூறியது. அன்புமணி அல்லது ராமதாஸ் என்ற தனிநபர்களுக்காக மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. தேர்தல் நடைமுறை அமலில் இருப்பதால் சின்னத்தை முடக்க நீதிமன்றத்திற்கு அனுமதியில்லை. பொது சின்னமான மாம்பழத்திற்கு முதலில் உரிமை கோரியவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்று வாதம் முன்வைக்கப்பட்டது. இந்த வழக்கில் இன்று மாலைக்குள் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உரிமையியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பாமகவின் மாம்பழம் சின்னம் யாருக்கு? ராமதாஸ் தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதில்…


