Wednesday, February 18, 2026

மூளையை தின்னும் அமீபா.. தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க உத்தரவு

Must read

விஜய் வேலூர் மக்கள் சந்திப்புக்கு 20 நிபந்தனைகள் விதித்த போலீசார்..!

வேலூர் அடுத்த அகரம்சேரியில் வரும் 23 ஆம்தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக 33 ஏக்கரில் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன....

மார்ச் 7 வேலூர் வரும் பிரதமர் மோடி: ஏற்பாடுகள் தீவிரம்

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை ( என்டிஏ) வலுப்படுத்தும் விதமாகவும், புதிய கட்சிகளை கூட்டணியில்...

தமிழ்நாட்டில் மார்ச் 16-இல் மாநிலங்களவை தேர்தல்: வெளியானது அறிவிப்பு

தமிழ்நாட்டில் விரைவில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல், மார்ச் 16ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாநிலங்களவையில் தமிழகத்திற்கு மொத்தம் 18 இடங்கள்...

பெண்கள் கணக்கில் ரூ.5,000 வரவு ; மகளிர் உரிமைத்தொகை இனி ரூ.2,000..!

தமிழ்நாட்டில் மகளிருக்கு வழங்கப்பட்டு வரும் ரூ.1000 உரிமைத் தொகையை, திராவிட மாடல் 2.Oவில் (அடுத்த திமுக ஆட்சியில்) ரூ.2,000ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும்,...

கேரளாவில் மூளையை தின்னும் அமீபாவின் தொற்று அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. மூளையை தின்னும் அமீபா எனப்படும் அமீபிக் மேனிங்கோஎன்செபாலிடிஸ் பாதிப்பு கேரளா மாநிலத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2025 ஆம் ஆண்டு தொடக்கம் முதல் தற்போது வரை சுமார் 42 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயின் காரணமாக பல உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, மூன்று மாத குழந்தை மற்றும் 52 வயதுடைய மூதாட்டி உட்பட 2025 ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் மூவர் உயிரிழந்துள்ளனர்.

இதற்காக கேரள அரசு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதாவது, கிணறுகள், நீச்சல் குளங்கள் மற்றும் தண்ணீர் தேங்கி நிற்கும் இடங்களை ஆய்வு செய்து வருகிறது. இதனைத் தடுப்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில், தமிழகத்தில் இந்த தொற்று நோய் பரவாமல் இருக்க மாவட்ட அதிகாரிகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. பொது சுகாதாரத் துறை இயக்குநர் சோமசுந்தரம், மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு சிறப்பு உத்தரவு பிறப்பித்துள்ளார். குறிப்பாக, குளங்கள், ரிசார்ட்டுகளில் இருக்கக்கூடிய நீச்சல் குளங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து சுத்தம் செய்ய வேண்டும் எனவும், நீச்சல் குளங்களில் இருக்கும் தண்ணீரை நான்கு நாட்களுக்கு ஒருமுறை மாற்றி குளோரின் பவுடர் சேர்த்து சுத்திகரிக்க வேண்டும் எனவும் கட்டாய உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. மாசடைந்த நீர்நிலைகளில் குழந்தைகள் விளையாடுவதை தவிர்க்க பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், சென்னையில் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. எனவே, காய்ச்சல் தொடர்பான அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த மூளையை தின்னும் அமீபா என்பது நன்னீரில் மட்டுமே வளரக்கூடியது. இது நீச்சல் குளங்களிலோ அல்லது குளங்களிலோ தண்ணீரை நாம் பயன்படுத்தும் போது, குளிக்கும் பொழுது மூக்குவழியாக உடலுக்குள் சென்று, மூளையை சென்றடையும். அங்கு இருக்கும் திசுக்களை அழித்து இந்த பாதிப்பு தொடங்குகிறது. இந்த அமீபா உடலுக்குள் சென்ற ஏழு நாட்களுக்குள் அறிகுறிகள் மோசமாகத் தொடங்கும். குறிப்பாக தலைவலி, காய்ச்சல், குமட்டல், வாந்தி, குழப்பம், நரம்பு வலி, வலிப்பு, மயக்கம் போன்றவை அடங்கும்.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

விஜய் வேலூர் மக்கள் சந்திப்புக்கு 20 நிபந்தனைகள் விதித்த போலீசார்..!

வேலூர் அடுத்த அகரம்சேரியில் வரும் 23 ஆம்தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக 33 ஏக்கரில் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன....

மார்ச் 7 வேலூர் வரும் பிரதமர் மோடி: ஏற்பாடுகள் தீவிரம்

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை ( என்டிஏ) வலுப்படுத்தும் விதமாகவும், புதிய கட்சிகளை கூட்டணியில்...

தமிழ்நாட்டில் மார்ச் 16-இல் மாநிலங்களவை தேர்தல்: வெளியானது அறிவிப்பு

தமிழ்நாட்டில் விரைவில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல், மார்ச் 16ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாநிலங்களவையில் தமிழகத்திற்கு மொத்தம் 18 இடங்கள்...

பெண்கள் கணக்கில் ரூ.5,000 வரவு ; மகளிர் உரிமைத்தொகை இனி ரூ.2,000..!

தமிழ்நாட்டில் மகளிருக்கு வழங்கப்பட்டு வரும் ரூ.1000 உரிமைத் தொகையை, திராவிட மாடல் 2.Oவில் (அடுத்த திமுக ஆட்சியில்) ரூ.2,000ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும்,...

கல்விக் கடன் தள்ளுபடி , முதியோர் ஓய்வூதியம் ரூ.2,000 – அதிமுகவின் 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்

வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகள் விறுவிறுப்படைந்துள்ள சூழலில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், கட்சியின் மாவட்டச் செயலர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த...