Saturday, April 4, 2026

வெளியானது திமுக வேட்பாளர்கள் பட்டியல் – கொளத்தூரில் மீண்டும் மு.க. ஸ்டாலின் ..!

Must read

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களுக்கு கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட பா.ஜ.க வினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களாக கோவை வடக்கு மற்றும் அவிநாசி தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ மற்றும் மத்திய இணை...

வானதி vs அண்ணாமலை.. எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு வைத்த செக்.. நடுவில் செந்தில் பாலாஜி

அரசியல் சதுரங்க வேட்டை என்பது எல்லா கட்சிகளும் மேற்கொள்வது தான். இந்த முறை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவை மண்டலத்தை வைத்து வைத்த நகர்வு மிகப்பெரிய ராஜதந்திரமாகவே...

தமிழ்நாடு சட்டம் – ஒழுங்கு புதிய டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்

2026 தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், தமிழக காவல்துறை உயரதிகாரிகளை மாற்றி இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அதிரடி...

ஆட்சியை நான்தான் காப்பாற்றிக் கொடுத்தேன்! எனக்கே சீட் இல்லை! தனபால்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு நான்தான் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை காப்பாற்றி கொடுத்தேன். அப்படிப்பட்ட எனக்கே சீட் கொடுக்கவில்லை என அவிநாசியின் சிட்டிங் எம்எல்ஏவும், முன்னாள் சபாநாயகருமான தனபால்...

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 28) வெளியிட்டார். இதில் 60-க்கும் மேற்பட்ட புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் மார்ச் 30-ம் தேதி தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4- ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில், அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

அதேபோல், அதிமுக சார்பில் போட்டியிடும் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டார். மொத்தம் 150 தொகுதிகளுக்கு அதிமுக தலைமை வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இன்னும் 17 தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர்களை அறிவிக்கப்படவில்லை.இதனிடையே, பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆளும்கட்சியான திமுகவின் வேட்பாளர்கள் பட்டியலை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அக் கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

அதன்படி, கொளத்தூர் தொகுதியில் மீண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் மீண்டும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் போட்டியிடுகின்றனர்.அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பு:

காட்பாடியில் துரைமுருகன், திருச்சி மேற்கில் கே.என்.நேரு, ஆத்தூரில் ஐ. பெரியசாமி, திருவண்ணாமலையில் எ.வ.வேலு, குறிஞ்சிப்பாடியில் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அருப்புக்கோட்டையில் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், திருச்சுழியில் தங்கம் தென்னரசு, திருமயம் தொகுதியில் ரகுபதி, ஈரோடு மேற்கில் முத்துசாமி, திருப்பத்தூரில் பெரியகருப்பன், ஆலந்தூரில் தா.மோ.அன்பரசன், காங்கேயத்தில் மு.பெ,சாமிநாதன், தூத்துக்குடியில் கீதா ஜீவன், திருச்செந்தூரில் அனிதா ராதாகிருஷ்ணன், முதுகுளத்தூரில் ராஜகண்ணப்பன், சேலம் வடக்கில் ராஜேந்திரன், ஒட்டன்சத்திரத்தில் சக்கரபாணி, சைதாப்பேட்டையில் மா.சுப்பிரமணியன், மதுரை கிழக்கில் பி.மூர்த்தி, குன்னத்தில் எஸ்.எஸ். சிவசங்கர், துறைமுகம் தொகுதியில் பி.கே.சேகர்பாபு, திருவிடைமருதூரில் கோவி.செழியன், மதுரை மத்திய தொகுதியில் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், ஆவடியில் சா.மு.நாசர், திருவெறும்பூரில் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஆலங்குடியில் மெய்யநாதன், திட்டக்குடியில் சி.வி.கணேசன், மன்னார்குடியில் டி.ஆர்.பி.ராஜா, ராசிபுரத்தில் மதிவேந்தன் ஆகியோர் மீண்டும் போட்டியிடுகின்றனர்.

மூத்த அமைச்சர் துரைமுருகனுக்கு மீண்டும் வாய்ப்பு:

வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவுக் காரணமாக திமுக பொதுச்செயலாளரும், தற்போதைய மூத்த அமைச்சரும், அவை முன்னவருமான துரைமுருகனுக்கு சீட் வழங்கப்படாது எனக் கூறப்பட்ட நிலையில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 13-வது முறையாகப் போட்டியிடும் துரைமுருகன், 10 முறை சட்டமன்றத்திற்கு சென்றுள்ளார்.பொன்முடி மகனுக்கு வாய்ப்பு:

முன்னாள் அமைச்சர் பொன்முடியின் தொகுதியான திருக்கோவிலூர் தொகுதி அவரது மகனும், முன்னாள் எம்.பி.யுமான மருத்துவர்.கௌதமசிகாமணிக்கு வழங்கப்பட்டுள்ளது. சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட திமுக தலைமையிடம் பொன்முடி விருப்ப மனுத்தாக்கல் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.

ராதாபுரத்தில் சபாநாயகர் அப்பாவு, கீழ்பென்னாத்தூரில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கோவைக்கு மாறிய செந்தில்பாலாஜி

கடந்த முறை கரூர் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தற்போது கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.

3 அமைச்சர்களுக்கு வாய்ப்பு இல்லை

எனினும், தற்போதைய அமைச்சர்களான மனோ தங்கராஜ், காந்தி, கயல்விழி செல்வராஜ் ஆகியோருக்கு இந்த முறை போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இருந்தாலும், அமைச்சர் காந்தியின் மகன் வினோத் காந்தி, ராணிப்பேட்டை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான், செஞ்சி தொகுதியில் போட்டியிடுகிறார். அதிமுகவின் கோட்டையான சேலம் தெற்கு தொகுதியில் புதுமுகமாக லோகநாதன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். திருக்கோவிலூரில் முன்னாள் எம்.பி.யும் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனுமான கௌதம சிகாமணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு வாய்ப்பு

அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்த ஓ. பன்னீர்செல்வம் (போடிநாயக்கனூர்), வைத்திலிங்கம் (ஒரத்தநாடு), மனோஜ் பாண்டியன் (ஆலங்குளம்) ஆகியோருக்கும் இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பெருந்துறையில் தோப்பு வெங்கடாசலம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஆண்டிபட்டியில் மோதும் அண்ணன், தம்பி

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தொகுதியில் திமுக சார்பில் மகாராஜன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் லோகிராஜன் இவரது சகோதரர் ஆவார். ஒரே தொகுதியில் அண்ணன் தம்பி இருவரும் வழக்கம் போலவே களமிறங்குகின்றனர்.

ராயபுரம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் ரகுமான் கானின் மகன் சுபேர்கான், தியாகராய நகரில் மறைந்த ஜெ.அன்பழகனின் மகன் ராஜா அன்பழகன் ஆகியோரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

- Advertisement -

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களுக்கு கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட பா.ஜ.க வினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களாக கோவை வடக்கு மற்றும் அவிநாசி தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ மற்றும் மத்திய இணை...

வானதி vs அண்ணாமலை.. எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு வைத்த செக்.. நடுவில் செந்தில் பாலாஜி

அரசியல் சதுரங்க வேட்டை என்பது எல்லா கட்சிகளும் மேற்கொள்வது தான். இந்த முறை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவை மண்டலத்தை வைத்து வைத்த நகர்வு மிகப்பெரிய ராஜதந்திரமாகவே...

தமிழ்நாடு சட்டம் – ஒழுங்கு புதிய டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்

2026 தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், தமிழக காவல்துறை உயரதிகாரிகளை மாற்றி இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அதிரடி...

ஆட்சியை நான்தான் காப்பாற்றிக் கொடுத்தேன்! எனக்கே சீட் இல்லை! தனபால்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு நான்தான் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை காப்பாற்றி கொடுத்தேன். அப்படிப்பட்ட எனக்கே சீட் கொடுக்கவில்லை என அவிநாசியின் சிட்டிங் எம்எல்ஏவும், முன்னாள் சபாநாயகருமான தனபால்...

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல்

சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஏப்.2) வேட்புமனு தாக்கல் செய்தார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான...