Wednesday, February 18, 2026

களப்பணியில் கலைஞரின் உடன்பிறப்புகளை வெல்ல எவரும் இல்லை எனக் காட்ட வேண்டிய தருணம் இது…

Must read

விஜய் வேலூர் மக்கள் சந்திப்புக்கு 20 நிபந்தனைகள் விதித்த போலீசார்..!

வேலூர் அடுத்த அகரம்சேரியில் வரும் 23 ஆம்தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக 33 ஏக்கரில் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன....

மார்ச் 7 வேலூர் வரும் பிரதமர் மோடி: ஏற்பாடுகள் தீவிரம்

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை ( என்டிஏ) வலுப்படுத்தும் விதமாகவும், புதிய கட்சிகளை கூட்டணியில்...

தமிழ்நாட்டில் மார்ச் 16-இல் மாநிலங்களவை தேர்தல்: வெளியானது அறிவிப்பு

தமிழ்நாட்டில் விரைவில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல், மார்ச் 16ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாநிலங்களவையில் தமிழகத்திற்கு மொத்தம் 18 இடங்கள்...

பெண்கள் கணக்கில் ரூ.5,000 வரவு ; மகளிர் உரிமைத்தொகை இனி ரூ.2,000..!

தமிழ்நாட்டில் மகளிருக்கு வழங்கப்பட்டு வரும் ரூ.1000 உரிமைத் தொகையை, திராவிட மாடல் 2.Oவில் (அடுத்த திமுக ஆட்சியில்) ரூ.2,000ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும்,...

திமுக இருக்கும்வரை இந்த மண்ணில் பாஜகவின் பகல்கனவு நிறைவேறாது என திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பேச்சு.

மாமல்லபுரம் கிழக்குக் கடற்கரைச் சாலையில், ‘என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி’ என்ற இலக்குடன் திமுகவினர் களப்பணியாற்றுவதற்கான பயிற்சி கூட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தினார். 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தேவையான பணிகள் குறித்து விவாதிக்கப்பட்ட இக்கூட்டத்தில், மாவட்டச் செயலாளர்கள், மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர் என 2,500-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

தொண்டர்கள் மனதில், இப்போ என்ன ஓடிட்டு இருக்குனு, எனக்கு நல்லா தெரியுது… என்னடா, தலைவரும் சும்மா இருக்கமாட்றாரு.. நம்மையும் சும்மா இருக்கவிடமாட்றாருனு சிலர் நினைப்பீர்கள். ஆனா சுணங்கி சும்மா இருந்துட்டா, நாம ஒரே இடத்துல தேங்கிடுவோம். ஆகையால் லட்சியத்தை நோக்கி ஓடிக்கிட்டே இருக்க வேண்டும். எப்போதும் மக்கள் கூடவே இருந்து பணியாற்றும் உங்களுக்கு, இந்த பயிற்சி கூட்டம் என்பது, எக்ஸாமுக்கு தயாராகுற ஸ்டூடண்ட், எல்லாத்தையும் படிச்ச பிறகு மீண்டும் ஒருமுறை ரிவிஷன் பண்ணுவாங்கள்ல. அப்படி எலக்‌ஷன் எனும் தேர்வுக்கு முன்னால் நாம் செய்யும் ரிவிஷன்தான் இந்த பயிற்சிக் கூட்டம்.2019 முதல் நாம் எதிர்கொண்ட அத்தனை தேர்தல்களிலும் மகத்தான வெற்றிகளை பெற்று வருவது, எதிரிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல, 2026 தேர்தலிலும் நாம்தான் வெற்றி பெறப் போகிறோம். அன்னைக்கு நியூஸ் ஹெட்லைன்ஸ் என்னனா “திராவிட மாடல் 2.0 ஆட்சி தொடங்கியது” இதுதான். இதை நான் ஆணவத்தில் சொல்லவில்லை. உங்கள் உழைப்பு மீதும், ஆட்சியின் சாதனைகள் மீதும். தமிழ்நாட்டு மக்கள் மீதும் உள்ள நம்பிக்கையில் கூறுகிறேன்” என்றார். மேலும் பேசிய அவர், “2026 தேர்தல் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கிற தேர்தல். தனித்தன்மையோடு தலைநிமிர்ந்து நிற்கிற நம் ஆட்சியா? அல்லது டெல்லிக்கு வளைந்து கொடுக்கிற அடிமைகளின் ஆட்சியானு தீர்மானிக்கிற தேர்தல். தமிழ்நாட்டோட சுயமரியாதையையும், தனித்தன்மையையும் காப்பாற்றப்போகும் தேர்தல்.தமிழ்நாட்டை அழிக்க இன எதிரிகளும், தமிழ்த் துரோகிகளும் நேரடியாகவும், மறைமுகமாகவும் வருகிறார்கள். அவர்களை வீழ்த்தி நம் மண், மொழி, மானத்தைக் காக்க வேண்டும். அதற்காகதான் திமுக கூட்டணி அனைத்துத் தொகுதிகளையும் கைப்பற்றியாகணும்னு தொடர்ந்து சொல்கிறேன்.
தமிழ்நாட்டுக்கு எல்லா வகையிலும் அநீதி இழைக்கப்படுகிறது. குறிப்பாக, இந்தி, சமஸ்கிருதம், ஜிஎஸ்டி, புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு, ஆளுநர் என தொல்லைக்கு மேல் தொல்லை கொடுக்கிறார்கள். இது தமிழ்நாட்டின் மேல் தொடுக்கப்படும் தாக்குதல். இந்த தாக்குதலை முறியடிக்கிற வல்லமை நமக்குதான் உள்ளது. ஏனென்றால், இந்த மண்ணில் திமுக இருக்கும்வரை பாஜகவின் பகல்கனவு நிறைவேறாது. அது அவர்களுக்கே நன்றாகத் தெரியும். இருந்தாலும், புதுசு புதுசா குறுக்குவழிகளைத் தேடுகிறார்கள். அந்த வகையில் உழைக்கும் மக்கள், பட்டியலினத்தவர், சிறுபான்மையினர், பெண்கள் உள்ளிட்டவர்களின் பெயர்களை SIR மூலமாக வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கிவிட்டால் பாஜகவும், அதன் கூட்டாளியான அதிமுகவும் வெற்றிபெற்று விடலாம்ன்னு கணக்கு போடுறாங்க. அதாவது, மக்களை நேரடியா தேர்தல் களத்தில் சந்திக்கிற தெம்பு, திராணி இல்லாதவங்க, மக்களோட வாக்குரிமையை பறிச்சிட்டா வெற்றி பெறலாம்-ன்னு தப்புக்கணக்கு போடுறாங்க. SIR முறையை கைவிடவேண்டும் என்பதையும், வாக்காளர் பட்டியலைச் சீர்ப்படுத்தணும்-னா அதுக்குரிய வழிமுறைகளைப் பின்பற்றி கால அவகாசத்தை வழங்க வேண்டும் என்பதையும் இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் திமுக நேரடியாகவே வலியுறுத்தியுள்ளது. அதையும் மீறி முன்னெடுக்கப்படுகிற ஜனநாயக விரோத செயல்பாடுகளை, சட்டரீதியா எதிர்கொள்வது மட்டுமில்லை, மக்களோடு களத்தில் நின்று எதிர்கொள்ளும் வலிமையும் நமக்கு உண்டு. இன்னும் சொல்லப்போனால் நமக்கு மட்டும்தான் உண்டு!ஆகையால், மக்களின் வாக்குரிமையையே பறிக்கத் துணியும் SIR செயல்பாட்டை விழிப்போடு கண்காணிக்க வேண்டும். உண்மையான வாக்காளர் எல்லாரும், வாக்காளர் பட்டியலில் இடம்பெற வேண்டும். அதை உறுதி செய்ய வேண்டியது உங்களுடைய பொறுப்பு,” என்றார்.

அத்துடன், ” அதிமுக தன்னோட சொந்தக்கட்சியின் உரிமைகளையே பாஜகவிடம் அடகு வெச்சிட்ட நிலையில், மக்களுடைய உரிமைகளைப் பத்தி கவலைப்பட அதுக்கு நேரமிருக்காது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் மக்களின் உரிமைகளை காக்க வேண்டியவர்கள் திமுகவினரும், தோழமைக் கட்சியினரும்தான் என்பதை மீண்டும் நினைவூட்டுகிறேன். மக்கள் நலனையும், மாநில உரிமைகளையும் காக்கும் திமுக ஆட்சியில் ‘தமிழ்நாடு தலைகுனியாது’-னு நான் உறுதியளிக்கிறேன். 2021 தேர்தல் தமிழ்நாட்டை கொத்தடிமை அதிமுக கூட்டத்திடம் இருந்து மீட்ட தேர்தல். அதேபோல, 2026 தேர்தல் என்பது தமிழ்நாட்டை பாஜக – அதிமுக கும்பலிடம் இருந்து பாதுகாப்பதற்கான தேர்தல். ஐந்தாண்டு காலம் வளப்படுத்தப்பட்ட தமிழ்நாட்டை கபளீகரம் செய்து நாசம் செய்யத் திட்டமிடும் கூட்டத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தியாக வேண்டும்.எதிர்க்கட்சி தலைவரா உள்ள எடப்பாடி பழனிசாமி, பெயரளவுக்காவது திராவிட கட்சியா இருந்த அதிமுகவை, அமித்ஷாகிட்ட விழுந்து சரண்டர் பண்ணிட்டாரு. அந்த கூட்டணியை தமிழ்நாட்டு மக்களும் விரும்பல, ஏன் அவருடைய கட்சிக்காரர்களும் விரும்பல! இருந்தாலும் விசிக வர்றாங்க, கம்யூனிஸ்ட்டுகள் வர்றாங்க, காங்கிரஸ் வர்றாங்கனு அவரும் தினமும் சொல்லிப் பார்த்தார். ஆனால் யாரும் அங்கே போகவில்லை… மக்களும் அவர் பேசுறத நம்பத் தயாராக இல்லை.

ஆகையால், தமிழ்நாட்டுக்கு எதிரா கூட்டணி அமைச்சிருக்க அவருடைய சந்தர்ப்பவாதத்தை மக்களிடம் எடுத்துச் சொல்லி, அவர்களுடைய நம்பிக்கையைப் பெற்று, அதை நமது கூட்டணிக்கான வாக்குகளா மாற்ற வேண்டும். திமுக 7ஆவது முறையும் ஏற்றமிகு ஆட்சியை அமைக்க வேண்டும். தமிழ்நாட்டை நிரந்தரமா ஆளும் தகுதி திமுக-வுக்கு தான் இருக்குனு நிரூபிக்கணும்” என்று திமுக தொண்டர்கள் மத்தியில் ஸ்டாலின் பேசினார்.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

விஜய் வேலூர் மக்கள் சந்திப்புக்கு 20 நிபந்தனைகள் விதித்த போலீசார்..!

வேலூர் அடுத்த அகரம்சேரியில் வரும் 23 ஆம்தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக 33 ஏக்கரில் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன....

மார்ச் 7 வேலூர் வரும் பிரதமர் மோடி: ஏற்பாடுகள் தீவிரம்

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை ( என்டிஏ) வலுப்படுத்தும் விதமாகவும், புதிய கட்சிகளை கூட்டணியில்...

தமிழ்நாட்டில் மார்ச் 16-இல் மாநிலங்களவை தேர்தல்: வெளியானது அறிவிப்பு

தமிழ்நாட்டில் விரைவில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல், மார்ச் 16ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாநிலங்களவையில் தமிழகத்திற்கு மொத்தம் 18 இடங்கள்...

பெண்கள் கணக்கில் ரூ.5,000 வரவு ; மகளிர் உரிமைத்தொகை இனி ரூ.2,000..!

தமிழ்நாட்டில் மகளிருக்கு வழங்கப்பட்டு வரும் ரூ.1000 உரிமைத் தொகையை, திராவிட மாடல் 2.Oவில் (அடுத்த திமுக ஆட்சியில்) ரூ.2,000ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும்,...

கல்விக் கடன் தள்ளுபடி , முதியோர் ஓய்வூதியம் ரூ.2,000 – அதிமுகவின் 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்

வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகள் விறுவிறுப்படைந்துள்ள சூழலில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், கட்சியின் மாவட்டச் செயலர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த...