சென்னை ஆர்.ஏ.புரத்தில் தீக்குளித்து தற்கொலை செய்த கண்ணையன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆக்கிரமிப்பு என கூறி வீடுகள் இடிக்கப்படுவதை எதிர்த்து தற்கொலை செய்தவரின் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்
சென்னை ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்பு பகுதியில் வசிப்போருக்கு மாற்று இடம் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மந்தைவெளி, மயிலாப்பூரில் மாற்று இடம் வழங்கப்படும். மாற்று இடம் வழங்குவது குறித்து வரும் காலங்களில் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும் எனவும் கூறியுள்ளார்.


