தமிழக புதிய முதல்வராக மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க ஸ்டாலின் பதவி ஏற்றார்.
அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் உளமார உறுதி ஏற்கிறேன் என்று ஸ்டாலின் கூறினார். தொடர்ந்து அமைச்சர்கள் ஒவ்வொருவராக பதவிப் பிரமாணம் எடுத்து ஏற்றுக்கொண்டார்கள்.





